நேற்று நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் லெட் லூஸ் நிகழ்வில் புதிய ஐபேட் ஏர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் எம்2 ரக சிப்செட் பயன்படுத்தி புதிய ஐபேட் ஏர் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 13 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு 2 வேரியண்டுகளாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 நிறங்களில் ஐ பேட் ஏர் சாதனம் வெளியாகி உள்ளது. சேமிப்பு திறன் அடிப்படையில் அதிகபட்சமாக 1 டிபி வரை கூடுதல் சேமிப்பு கொடுக்கப்படுகிறது. ஐ பேட் ஏர் புதிய மாடல் 128 ஜிபி மெமரி கொண்டதாகும். மேலும், 12 மெகாபிக்சல் கேமரா திறன் கொண்டதாகும். இவை தவிர, வைஃபை, சிக்ஸ் இ , டச் ஐ டி போன்ற நவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த சாதனத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரிக்கும் என கருதப்படுகிறது.