யூடியூப் தளத்தில் ஸ்கிப் செய்ய முடியாத விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகிறது. சந்தா செலுத்தாத பயனர்கள் கண்டிப்பாக விளம்பரங்களை பார்த்தாக வேண்டிய படி, யூடியூப் விளம்பர திட்டத்தை வடிவமைத்துள்ளது. அதேபோன்ற திட்டத்தை இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
விளம்பரதாரர்களை ஊக்குவிக்கும் திட்டங்களை கொண்டு வருவதில் மெட்டா நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, யூடியூப் போலவே ஸ்கிப் செய்ய முடியாத விளம்பரங்களை இன்ஸ்டாகிராமில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும், இந்த அம்சம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை நிறுவனத்துக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என கருதப்படுகிறது.