வரும் 2025 ஆம் நிதி ஆண்டில், உலகளாவிய முறையில் பதிவாகும் மொத்த ஐ போன் உற்பத்தியில், 18% இந்தியாவிலிருந்து இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தியாவில் அதன் கட்டமைப்புகளை விரிவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது. அத்துடன், இந்திய அரசின் பி எல் ஐ திட்டத்தின் கீழ், ஐ போன் உற்பத்தியை 5 மடங்கு உயர்ந்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஆம் நிதி ஆண்டில், 55 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஐபோன் ஏற்றுமதி பதிவாகும் எனவும், 126 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உள்நாட்டு உற்பத்தி இருக்கும் எனவும், எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் சீனா மற்றும் வியட்நாம் நாட்டு கைபேசிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவை முறையே, 38% மற்றும் 24% உற்பத்தியை பதிவு செய்துள்ளன. இவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபோன் உற்பத்தி அளவு (18%) குறைவாக கருதப்படுகிறது.














