எழுத்துப் பூர்வமாக கொடுக்கப்படும் கட்டளைகளை கொண்டு புகைப்படங்களை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இதற்கு எம் ஜி ஐ இ (MGIE) என பெயரிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பல புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனமும், செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் புதிய கருவியை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், எழுத்துப்பூர்வமான கட்டளைகளைக் கொண்டு, புகைப்படங்களை புதிதாக உருவாக்குவது, ஏற்கனவே உள்ள புகைப்படங்களில் மாற்றங்கள் செய்வது, போன்ற பணிகளை செய்ய ஆப்பிள் நிறுவனத்தின் எம் ஜி ஐ இ (MGIE) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் இது பொது பயன்பாட்டுக்கு வெளியிடப்படவில்லை. இந்த செயற்கை நுண்ணறிவு கருவி எதிர்காலத்தில் மிக முக்கிய பங்கை கொண்டிருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.