முதல் முறையாக ஆப்பிள் விஷன் ப்ரோ பயன்படுத்தி நடத்தப்படும் அறுவை சிகிச்சை

பிரிட்டனில் உள்ள குரோம்வெல் மருத்துவமனையில் ஆப்பிள் விஷன் ப்ரோ பயன்படுத்தி முதல் முறையாக அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் விஷன் ப்ரோ பயன்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை சமயத்தில் மனித தவறுகளை குறைப்பதற்கு இந்த கருவி பயன்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக, இந்த கருவியை மருத்துவர்கள் அணிவதில்லை. செவிலியர்கள் அணிகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை எந்த தவறும் இன்றி செயல்படுத்துவதற்கு ஆப்பிள் ஹெட்செட் உதவி செய்வதாக […]

பிரிட்டனில் உள்ள குரோம்வெல் மருத்துவமனையில் ஆப்பிள் விஷன் ப்ரோ பயன்படுத்தி முதல் முறையாக அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் விஷன் ப்ரோ பயன்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை சமயத்தில் மனித தவறுகளை குறைப்பதற்கு இந்த கருவி பயன்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக, இந்த கருவியை மருத்துவர்கள் அணிவதில்லை. செவிலியர்கள் அணிகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை எந்த தவறும் இன்றி செயல்படுத்துவதற்கு ஆப்பிள் ஹெட்செட் உதவி செய்வதாக கூறப்படுகிறது. “மருத்துவர் கூறும் கட்டளைகளுக்கு ஏற்ப, சரியான கருவியை, சரியான நேரத்தில் எடுத்து தருவதற்கு இது மிகவும் உதவிகரமாக இருந்தது. யூகத்தின் அடிப்படையில் செயல்படுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும். இது மருத்துவ துறையில் முக்கிய திருப்புமுனையாக அமையும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu