தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனை நிரப்பி, முந்தைய தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன், தேர்வர் வசிக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஏற்கப்படும். விசேஷ அனுமதி மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் 25, 26-ந்தேதி கூடுதல் ரூ.1000 கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் தலா ரூ.100, பதிவு மற்றும் சேவை ரூ.15, ஆன்லைன் பதிவு ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.