ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பம் வரவேற்பு

December 7, 2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஹஜ் 2024 ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 4 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாக அல்லது HAJ SUVIDHA என்ற செயலியினை பயன்படுத்தி பூர்த்தி செய்யலாம். இதற்கான விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். […]

தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஹஜ் 2024 ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 4 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாக அல்லது HAJ SUVIDHA என்ற செயலியினை பயன்படுத்தி பூர்த்தி செய்யலாம். இதற்கான விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசிப் பக்கம், வெள்ளை நிறத்துடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கி கணக்கு புத்தகங்கள் முகவரி சான்றிதழ் நகல் ஆகியவற்ற இதனுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு போல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம். வாழ்நாளில் ஒரு முறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu