தமிழகத்தில் பதவிக்காலம் முடிவடைந்த ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2019-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.2022-ல் தி.மு.க. ஆட்சியின்போது, 9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று, 2021 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.
இப்போது, 2019 டிசம்பர் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5-ந் தேதியுடன் முடிவடையும். இதனால், பதவிக்காலம் முடிவடைந்த 28 மாவட்டங்களில் சிறப்பு அலுவலர்களை நியமித்து, புதிய ஊராட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும்.