அர்ஜென்டினா உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: 18 வயது சுருச்சி தங்கம்

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் தங்கம் வென்றார். அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 18 வயதான இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் பெண்களுக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் 244.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து அவர் திகழ்ந்தார். இந்தியாவிற்கு இது மூன்றாவது தங்கமாகும். இந்நிகழ்வில், சீனாவின் கியான் வெய் […]

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் தங்கம் வென்றார்.

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 18 வயதான இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் பெண்களுக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் 244.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து அவர் திகழ்ந்தார். இந்தியாவிற்கு இது மூன்றாவது தங்கமாகும். இந்நிகழ்வில், சீனாவின் கியான் வெய் வெள்ளிப் பதக்கம் (241.9), ஜியாங் ரேன்சிங் வெண்கலப் பதக்கம் (221) பெற்றனர்.

முன்னதாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர், தகுதி சுற்றில் 13-வது இடத்தில் இருந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆண்கள் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டலில் விஜய்வீர் சித்து தங்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினார்.தற்போது பதக்கப்பட்டியலில் சீனா முதல் இடத்தில், இந்தியா (4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்) கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu