இந்திய ராணுவத்தின் பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி

April 15, 2024

கடந்த சனிக்கிழமை, பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பு சோதனையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் - டி ஆர் டி ஓ, பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பு ஒன்றை உருவாக்கியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பகல் மற்றும் இரவு நேரங்களிலும் இந்த அமைப்பு செயல்படும். ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் […]

கடந்த சனிக்கிழமை, பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பு சோதனையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் - டி ஆர் டி ஓ, பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பு ஒன்றை உருவாக்கியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பகல் மற்றும் இரவு நேரங்களிலும் இந்த அமைப்பு செயல்படும். ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் ஏவுகணை சோதனை தளத்தில் இந்த அமைப்பு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், ராணுவ பயன்பாட்டுக்கான இறுதி மதிப்பீட்டுக்கு ஏவுகணை அமைப்பு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu