தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஆறாம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.. மேலும் தேர்வுக்கான தேதிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி முதலாம் ஆண்டிற்கான முதல் பருவ தேர்வுகள் அக்டோபர் 31 இல் தொடங்கி நவம்பர் 25ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பர் 16ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது