அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி நிறுவனத்தின் நிகர லாபத்தில் 61% உயர்வு பதிவாகியுள்ளது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 580 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 361 கோடி ரூபாயாக இருந்தது. எனவே, ஓர் ஆண்டில் 61% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஆண்டில் 9030 கோடி ஆக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், இந்த வருடம் 9273 கோடி ஆக உயர்ந்துள்ளது.