விடுதி சேவைகளை வழங்கும் பிரபல நிறுவனமான ஓயோ, ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களை பங்குச் சந்தை ஒழுங்காற்று மையமான செபியிடம் சமர்ப்பித்திருந்தது. தற்போது, இந்த ஆவணங்களை திரும்ப பெற்றுள்ளது.
ஓயோ நிறுவனம் கிட்டத்தட்ட 8430 கோடி நிதியை ஐ பி ஓ மூலம் திரட்டுவதாக இருந்தது. கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இதற்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்தது. தற்போது, ஆவணங்களை திரும்ப பெற்றுள்ளது. மேலும், அமெரிக்க டாலர் பத்திரங்களின் விற்பனை மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 3735 கோடி நிதியை அமெரிக்க டாலர் பத்திரங்கள் மூலம் ஓயோ திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பரிமாற்றங்களை ஜேபி மார்கன் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இந்த தகவல்களை உள்ளடக்கிய புதிய ஐபிஓ ஆவணங்களை ஓயோ நிறுவனம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.