சீனாவில் நடைபெற்று வந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு பெற்றது.
சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23ஆம் தொடங்கியது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12500 வீரர்கள் பங்கேற்று வந்தனர். இதில் இந்தியா சார்பில் 35 போட்டிகளில் சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் 15வது நாளில் இந்தியா 100 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தது. பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்தியாவிற்கான ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மொத்தம் 107 பதக்கங்களை பெற்று இந்தியா போட்டியை நிறைவு செய்துள்ளது. இதில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதிகபட்சமாக தடகளப் போட்டியில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.