பாகிஸ்தானின் அதிபராக ஆசிப் அலி சர்தாரி பொறுப்பேற்க உள்ளார்.
முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பீலாவல் பூட்டோவின் தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி ஜர்தாரி பாகிஸ்தானின் 14 வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். நவாஸ் ஷெரிப் கட்சியுடன் இவர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி இன்று நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.