முதல்முறையாக வடகிழக்கு இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியை ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவுடன் மாணவர்கள் கலந்துரையாடினர்.
கௌகாத்தியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஐரிஸ் ரோபோ மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தது. மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்தது. மாணவர்களுடன் கை குலுக்குதல் உள்ளிட்ட உடல் மொழியிலும் ஐரிஸ் ரோபோ ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கான கற்றல் திறன் மேம்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மேக்கர் லேப்ஸ் எஜு டெக், அடல் டிங்கரிங் லேப் ஆகியவற்றின் கூட்டணியில் உருவாக்கப்பட்டதாகும். நிதி ஆயோக் திட்டத்தின் படி இது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.