நாசா, ஒசிரிஸ் ரெக்ஸ் திட்டத்தில், பென்னு என்ற சிறுகோளில் இருந்து மண் மற்றும் கல் மாதிரிகளை சேகரித்துள்ளது. அதனை ஆய்வு செய்து, அது சார்ந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.பென்னு விண்கல், சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும். இந்த சிறு கோளில் அதிக அளவிலான கார்பன் மற்றும் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், பூமி உருவாவதற்கு காரணமாக இருந்த முக்கிய தாது பொருட்களும் இந்த சிறு கோளில் உள்ளதாக நாசா உறுதி செய்துள்ளது. அத்துடன், பென்னு சிறு கோளில் உயிரிப் பொருட்களும் நிறைந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. அதன்படி, பூமியானது விண்வெளியில் உள்ள பொருட்கள் மூலம் உருவானது என்ற கருத்தியலுக்கு வலு சேர்ந்து உள்ளதாக கூறியுள்ளது. நாசா அதிகாரி பில் நெல்சன் பென்னு குறித்த தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.