அதி வேகமாக பயணிக்கும் விண்கல், இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது - நாசா எச்சரிக்கை

December 9, 2022

பூமியை நோக்கி அதி வேகமாக பயணித்து வரும் விண்கல் ஒன்று, இன்றைய தினம், பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், சூரிய புயல் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளாலும், 40-க்கும் மேற்பட்ட விண்கற்களாலும், பூமிக்கு அதிக அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. Asteroid 2022 XJ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 51 அடி அகலம் உடையதாகும். இன்று பூமியிலிருந்து சுமார் 2.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு […]

பூமியை நோக்கி அதி வேகமாக பயணித்து வரும் விண்கல் ஒன்று, இன்றைய தினம், பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், சூரிய புயல் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளாலும், 40-க்கும் மேற்பட்ட விண்கற்களாலும், பூமிக்கு அதிக அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Asteroid 2022 XJ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 51 அடி அகலம் உடையதாகும். இன்று பூமியிலிருந்து சுமார் 2.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு இது வரவுள்ளது. மணிக்கு 36605 கிலோமீட்டர் வேகத்தில் இது பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது. அப்பல்லோ குடும்பத்தைச் சேர்ந்த இந்த விண்கல், கடந்த டிசம்பர் 1ம் தேதி கண்டறியப்பட்டது. இது சூரியனிலிருந்து 317 மில்லியன் கிலோமீட்டர் தொலைவாகவும், 135 மில்லியன் கிலோமீட்டர் நெருக்கமாகவும் சுற்றுவட்ட பாதையில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu