தற்போது, பூமிக்கு மிக நெருக்கமாக காணப்படும் மற்றும் பூமியை சுற்றி வரும் சிறுகோள், நிலவின் ஒரு பகுதி என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
லைஃப் சயின்ஸ் என்ற இதழில் வெளிவந்துள்ள புதிய ஆய்வு அறிக்கையில், பூமியை சுற்றி வரும் Kamo'oalewa சிறுகோள், நிலவின் ஒரு பகுதி என சொல்லப்பட்டுள்ளது. இது பூமியை 14.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது, கடந்த 2016 ஆம் ஆண்டு இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் அப்போது முதல் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வெளியிலிருந்து வந்த விண்கல் மோதியதால், நிலவிலிருந்து வெளியான சில பகுதிகள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் Kamo'oalewa என கூறப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் விதத்தில், நிலவைப் போன்ற சில கூறுகள் இதில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.