இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி, நேபாளத்திற்கு அடுத்தபடியாக இலங்கையில் கால் பதிக்கிறது. இது, நிறுவனத்தின் இரண்டாவது சர்வதேச விரிவாக்கமாகும்.
இலங்கையில் தனது முதல் அனுபவ மையத்தை அடுத்த காலாண்டில் திறக்க ஏத்தர் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டு முயற்சி எவல்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சென்செய் கேபிடல் பார்ட்னர்ஸ், அட்மான் குரூப் மற்றும் சினோ லங்கா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு முயற்சியே எவல்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் ஆகும். இலங்கையில் ஏத்தர் இன் விற்பனை மற்றும் சேவை நடவடிக்கைகளை எவல்யூஷன் ஆட்டோ மேற்பார்வை செய்யும். மேலும், இலங்கை முழுவதும் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் நிறுவும்.