இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

March 20, 2023

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தேசியகொடியும் அவமதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது மர்மநபர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அடையாளம் காண்பது, கைது […]

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தேசியகொடியும் அவமதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது மர்மநபர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அடையாளம் காண்பது, கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக அதிகாரி அலெக்ஸ் எல்லிஸ் தனது சமூகவலைதளத்தில் இந்திய தூதரகத்தின் மீதான அவமானகரமான செயல்களை கண்டிக்கிறேன். இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பதிவிட்டு உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu