மருத்துவமனை, பள்ளி, வீடுகள் என எதையும் விலக்காமல் தாக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வை ஏற்படுத்துகின்றன.
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர். அல்-அக்ஸா மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்டவை பெரிதும் சேதமடைந்துள்ளன. அல்-வஹ்தா சாலையில் பாதசாரிகளை குறிவைத்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் உணவுத்தொகுப்பு மையத்தின் மீது வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். இஸ்ரேலிய இராணுவம் 18 பகுதிகளை காலியிட உத்தரவு பிறப்பித்து, வடக்கு காசாவில் மக்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. மொத்தமாக, திங்களன்று மட்டும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் ஊழல் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.