மெல்போர்ன் நகரில் நடைபெற்று வந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்கா ஓபன் என நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்த ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது. இதில் 7-6(7-0),7-5, என்ற செட்டுகளில் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.














