ஆஸ்திரியா நாட்டில், ஹாம்பர்க் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயிலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்ஸ்ப்ருக் நகருக்கு அருகே, ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள குகை பகுதியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அறுந்து இருந்த கேபிள் வயர் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ரயிலில், பயணிகளுடன் வாகனங்களும் ஏற்றிச் செல்லப்பட்டது. எனவே, தீ வாகனங்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தெரிய வந்தவுடன், ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட 200 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பயணிகளில் 45 பேருக்கு, புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மற்றபடி பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பற்றிய தீ தற்போது முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது.














