ஆக்சிஸ் வங்கி காலாண்டு முடிவுகள் வெளியீடு - நிகர லாபம் 7130 கோடி

April 25, 2024

தனியார் துறையில் முன்னணியில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் 7130 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த வருடம் 5728.4 கோடி அளவில் இழப்பு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த காலாண்டில் ஆக்ஸிஸ் வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த நிகர வருவாய் 11.5% உயர்ந்து 13089 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த முறையில், ஆக்சிஸ் வங்கியின் […]

தனியார் துறையில் முன்னணியில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் 7130 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த வருடம் 5728.4 கோடி அளவில் இழப்பு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலாண்டில் ஆக்ஸிஸ் வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த நிகர வருவாய் 11.5% உயர்ந்து 13089 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த முறையில், ஆக்சிஸ் வங்கியின் அனைத்து பிரிவுகளிலும் முன்னேற்றம் பதிவாகி வருவதாக தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும், சிட்டி பேங்க் உடனான ஆக்சிஸ் வங்கி இணைப்பு அடுத்த ஆறு மாதத்துக்குள் இறுதி கட்டத்தை எட்டும் என தெரிவித்துள்ளார். பாரத் பேங்கிங், டிஜிட்டல் மற்றும் ஸ்பார்ஷ் துறைகளில் குறிப்பிடத்தக்க இலக்குகளை எட்டி உள்ளதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu