பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது

November 22, 2022

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கவுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக உள்ள பாபநாசம் அணையின் முழு கொள்ளளவு 143 அடி ஆகும். தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய அணையாக திகழ்கிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 98.60 அடியை […]

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கவுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக உள்ள பாபநாசம் அணையின் முழு கொள்ளளவு 143 அடி ஆகும். தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய அணையாக திகழ்கிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 98.60 அடியை எட்டி, 100 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 998.73 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர் வெளியேற்றம் 704.75 கன அடியாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu