குழந்தைகளுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு சில மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில மருத்துவ பொருட்கள் அடங்கிய பல குளிர் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. இதுபோன்ற இருமல் மருந்துகளால் உலக அளவில் குறைந்தது 141 குழந்தைகள் இறந்ததை அடுத்து அதற்கேற்ப மருந்துகளை குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்படாத குளிர் - எதிர்ப்பு மருந்து உருவாக்குவதை ஊக்குவிப்பது ஒரு விவாதத்தை தூண்டியதாகவும், மேலும் குறிப்பிட்ட வயதினருக்கு இந்த கலவையை பயன்படுத்த வேண்டாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.














