தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் விதித்துள்ள தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார். முன்னதாக குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் […]

தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் விதித்துள்ள தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார். முன்னதாக குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடைபெற்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து, குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu