பொதுமக்களின் நலன் கருதி மீஞ்சூரில் காலை ஆறு மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மீஞ்சூரில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தச்சூரிலிருந்து பொன்னேரி சாலைக்கும், மீஞ்சூர் அத்திப்பட்டு எண்ணூர் துறைமுகத்தின் சாலையிலிருந்து தச்சூர் கூட்டு சாலைக்கும் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படுத்துவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.