வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆம்னி பேருந்துகளுக்கு "மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 88 (9)இன் படி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல ஏ.ஐ.டி.பி எனப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் நிபந்தனைகளை […]

தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.

தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆம்னி பேருந்துகளுக்கு "மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 88 (9)இன் படி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல ஏ.ஐ.டி.பி எனப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் நிபந்தனைகளை மீறுவதினால் மாநில அரசிற்கு வெகுவான வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. எனவே இதனை சரிபடுத்தும் நோக்கில் நாளை முதல் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பது அவசியம். மேலும் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்திற்குள் பயணித்த விவரங்கள் சுற்றுலா முடிவுறும் போது வெளியேறும் விவரம் ஆகியவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் .இந்த நிபந்தனைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி வெளி மாநில பதிவு மற்றும் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என அதிரடி உத்தரவு இடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu