ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்களுக்கு தடை - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

August 27, 2022

  ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்கள் வைக்க உடனடி தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய பிரபல பார்லே நிறுவனத்துடன் நேற்று ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.இதனை பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். இதைதொடர்ந்து, திருப்பதி நகரிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். […]

 

ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்கள் வைக்க உடனடி தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய பிரபல பார்லே நிறுவனத்துடன் நேற்று ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.இதனை பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

இதைதொடர்ந்து, திருப்பதி நகரிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் அங்கு நீர், காற்றில் ஏற்படும் மாசு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பிளாஸ்ட் பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, பிளாஸ்டிக் பேனர்கள் வைக்க ஆந்திர அரசு தடை விதிக்கிறது. துணிகளில் பேனர்கள் பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. வரும் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் உபயோகிக்காத மாநிலமாக ஆந்திரா உருவாக வேண்டும் என்றார்.

தற்போது கடலில் 40 கி.மீ தூரம் வரை பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இதனால் மீன்கள் உட்பட பல கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனை சரிசெய்யவே பார்லே நிறுவதுடன் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அகற்றப்படும் கழிவுகளை கொண்டு மறு சுழற்சி மூலம் அடிடாஸ், அமெரிக்கா எக்ஸ்பிரஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்க விற்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் மாநிலத்திற்கு ஆண்டிற்கு ரூ. 16 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu