பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கும் கப்பல்களுக்கு தடை

பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கும் எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களில் நுழையக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு கட்டாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, இருநாடுகளுக்கிடையே நடைபெற்ற சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் நாடு கடந்தனர். இந்நிலையில், இந்தியாவின் இந்த முடிவுகளுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தன்னுடைய எல்லைமீதான இந்தியாவுடன் உள்ள அனைத்து […]

பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கும் எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களில் நுழையக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு கட்டாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, இருநாடுகளுக்கிடையே நடைபெற்ற சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் நாடு கடந்தனர். இந்நிலையில், இந்தியாவின் இந்த முடிவுகளுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தன்னுடைய எல்லைமீதான இந்தியாவுடன் உள்ள அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்தது. இதற்குப் பதிலாக, பாகிஸ்தானில் இருந்து நேரடி மற்றும் மறைமுகமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, தற்போது பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கும் எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களில் நுழையக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், இந்தியக் கொடி ஏந்திய எந்தவொரு கப்பலும் பாகிஸ்தானின் துறைமுகங்களை நோக்கி செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu