வங்காள தேசத்தில் இட ஒதுக்கீட்டை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

July 22, 2024

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்கதேசத்தில் அரசு பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி கடந்த சில தினங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து இங்கு வன்முறைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச […]

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வங்கதேசத்தில் அரசு பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி கடந்த சில தினங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து இங்கு வன்முறைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளை 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறை இருந்து வந்தது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு 2018 ஆம் ஆண்டு இந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. அரசின் இந்த உத்தரவு செல்லாது என்று கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இந்த வன்முறை உச்சகட்டம் அடைந்ததால் வன்முறையாளர்களை கண்டவுடன் சுடும்படி காவல் துறைக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இது தொடர்பான மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக குறைப்பதாகவும் 93 சதவீத அரசு பணிகள் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதோடு சிறுபான்மையினர், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu