இந்தியாவுக்கு எதிராக பேசிய தூதரை நீக்கியது தாய்லாந்து

March 2, 2024

உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தூதரை தாய்லாந்து அரசு அப்பதவியில் இருந்து நீக்கியது. உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தாய்லாந்து தூதரை பதவி விலக்கியது. அந்நாட்டு அரசு தூதரின் கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததை அடுத்து தாய்லாந்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் அபுதாபியில் கடந்த மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. […]

உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தூதரை தாய்லாந்து அரசு அப்பதவியில் இருந்து நீக்கியது.

உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தாய்லாந்து தூதரை பதவி விலக்கியது. அந்நாட்டு அரசு தூதரின் கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததை அடுத்து தாய்லாந்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் அபுதாபியில் கடந்த மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தாய்லாந்து நாட்டின் பெண் தூதர் பிம்சனாக் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து அரசு அரிசியை கொள்முதல் செய்வது, பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்குவதற்கு அல்ல. அரிசி ஏற்றுமதி சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்றார். இது தொடர்பாக இந்தியா தனது எதிர்ப்பை தாய்லாந்து அரசு மற்றும் உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவித்தது. அதோடு தாய்லாந்து பிரதிநிதிகள் பங்கேற்ற அமர்விலும் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது. இதையடுத்து தாய்லாந்து அரசு அந்நாட்டு தூதரை பொறுப்பில் இருந்து விடுவித்தது.

இந்தியாவின் அரிசி கொள்முதல் திட்டம் குறித்து அபத்தமான கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பேச்சு முறையானதாக இல்லை என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது. சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் வியட்நாம், தாய்லாந்து, இந்தியா ஆகியவை முன்னிலையில் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu