வணிக வளாகத்தில் தீ விபத்து - வங்கதேசத்தில் 43 பேர் பலி

March 1, 2024

வங்கதேச தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஆறு மாடி வணிக வளாகம் ஒன்றில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்தில் காயமடைந்த 22 க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சமந்தா லால் சென் தெரிவித்துள்ளார். வணிக வளாகத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால், […]

வங்கதேச தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஆறு மாடி வணிக வளாகம் ஒன்றில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்தில் காயமடைந்த 22 க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சமந்தா லால் சென் தெரிவித்துள்ளார்.

வணிக வளாகத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால், வெளியே வர முடியாமல் பலர் கட்டடத்துக்குள் சிக்கினர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கிட்டத்தட்ட 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கட்டடத்துக்குள் இருந்து 42 பேர் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டிடத்துக்குள் இருந்து 75 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu