ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள வங்காளதேச அணியினை அந்நாடு அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்க உள்ள அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகின்றன. அவ்வகையில் வங்காளதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. அதில் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.
ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத் நியமிக்க பட்டுள்ளனர்