கடைசி நேரத்தில், ஜப்பானின் நிலவு திட்டம் நிறுத்தம்

August 28, 2023

இன்று காலை, ஜப்பானின் நிலவு திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SLIM என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை, நிலவில் தரையிறக்கும் முக்கிய திட்டத்தில் ஜப்பான் விண்வெளி மையம் பணியாற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்வது முதல், பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னிறுத்தி அனுப்பப்படுவதாக இருந்தது. மொத்தம் 200 கிலோ எடை உடைய இந்த […]

இன்று காலை, ஜப்பானின் நிலவு திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SLIM என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை, நிலவில் தரையிறக்கும் முக்கிய திட்டத்தில் ஜப்பான் விண்வெளி மையம் பணியாற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்வது முதல், பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னிறுத்தி அனுப்பப்படுவதாக இருந்தது. மொத்தம் 200 கிலோ எடை உடைய இந்த விண்கலத்தில், நானோ டெக்னாலஜி மூலம் வடிவமைக்கப்பட்ட பல்வேறு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 4 வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், ஜப்பான் 5 வது நாடாக அங்கம் வகிக்க இந்த திட்டம் முக்கியமானது. ஆனால், திட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu