கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் லாபம் 95% உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் விளைவாக, பங்குச்சந்தையில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா பங்குகள் 6% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
கடந்த காலாண்டில், பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் மொத்த வருவாய் 5417 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகர லாபம் 882 கோடியாக பதிவாகியுள்ளது. எனவே, நேற்றைய வர்த்தகத்தில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா பங்குகள் மிகுந்த ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச் சந்தையில் 142.08 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 16.47 கோடி பங்குகளும் நேற்று வர்த்தகமாயின. மேலும், மும்பை பங்குச்சந்தையில் 6.34% மற்றும் தேசிய பங்குச் சந்தையில் 5.39% என்ற அளவில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா பங்குகள் உயர்ந்தன.