வங்கிகளே ரூபே ப்ரீபெய்ட் ஃபாரக்ஸ் கார்டுகளை விநியோகிக்கலாம் - சக்தி காந்ததாஸ் அறிவிப்பு

June 8, 2023

வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு பயனளிக்கும் விதமாக, மத்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் செயல்படும் வங்கிகள், தாங்களாகவே ரூபே ப்ரீபெய்ட் ஃபாரக்ஸ் கார்டுகளை விநியோகிக்கலாம். இது தொடர்பாக பேசிய மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பொதுமக்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும், ரூபே கார்டை சர்வதேசமயம் ஆக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். […]

வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு பயனளிக்கும் விதமாக, மத்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் செயல்படும் வங்கிகள், தாங்களாகவே ரூபே ப்ரீபெய்ட் ஃபாரக்ஸ் கார்டுகளை விநியோகிக்கலாம். இது தொடர்பாக பேசிய மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பொதுமக்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும், ரூபே கார்டை சர்வதேசமயம் ஆக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், இந்திய வங்கிகளிடம் இருந்து ரூபே கார்டுகளை பெற முடியும். இதன் மூலம், வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்கான கட்டண முறைகள் விரிவாக்கப்படும். எனவே, இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu