விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்

February 19, 2024

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். கடந்த ஒரு வாரம் முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் அவர்கள் சென்ற விசைபடகை இலங்கை அரசு சிறை பிடித்தது. இதனை தொடர்ந்து மீனவர்களில் 21 பேரை இலங்கை அரசு விடுவித்தது. மேலும் படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவருக்கு ஆறு மாத சிரையும் அளித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு […]

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

கடந்த ஒரு வாரம் முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் அவர்கள் சென்ற விசைபடகை இலங்கை அரசு சிறை பிடித்தது. இதனை தொடர்ந்து மீனவர்களில் 21 பேரை இலங்கை அரசு விடுவித்தது. மேலும் படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவருக்கு ஆறு மாத சிரையும் அளித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை ராமநாதபுரத்தில் மீனவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu