பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடன் அளித்த விவகாரம் தொடர்பாக, பிபிசி நிறுவனத்தின் சேர்மன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று, பிபிசி சேர்மன் ஆன ரிச்சர்ட் ஷார்ப், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்த அவர், தற்போது, இந்த குற்றச்சாட்டுகளால் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பதவி விலகுவதாக கூறியுள்ளார்.
பிபிசி தலைவர் பதவி மற்றும் நியமனம் பிரிட்டன் அரசின் வசம் உள்ளது. இந்த நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பரிவர்த்தனையில், ஷார்ப் ஈடுபட்டார் என்பது தெரிய வந்தது. எனவே, ஷார்ப் -ன் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் தான், தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை ஷார்ப் வெளியிட்டுள்ளார்.