இஸ்ரேல் படை ரபா அகதிகள் முகாம் அருகே வான் வழி தாக்குதல் நடத்தியதுல் 8 பேர் பலியாகினர்.
ரஃபா நகரில் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் தற்போது மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் ஷாதி அகதிகள் முகாம் அருகே ஒரு உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. அப்போது சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் எட்டு பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் ஆயுத படையின் மூத்த நிபுணர் ஒருவர் பலியானதாக ராணுவம் கூறியுள்ளது. ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து பலர் ரஃபாவில் இருந்து வெளியேறி வடக்கு காசாவில் உள்ள கான்யூனிஸ் மற்றும் மதிய காசாவில் உள்ள டேர் நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.