பெங்களூரு மாநகராட்சி பிரதமர் மோடி வருகையொட்டி சாலையை அழகாக்க ரூ.9 கோடி செலவிட்டது

November 14, 2022

பெங்களூரு மாநகராட்சி பிரதமர் மோடி வருகையால் சாலையை அழகாக்க ரூ.9 கோடி செலவிட்டுள்ளது. கெம்பேகவுடா சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி நேற்று முன் தினம் பெங்களூரு வந்திருந்தார். அவர் பயணிக்கும் சாலைகளில் பள்ளங்களை மூடி தார் போடப்பட்டு அழகாக்கப்பட்டன. இதற்காக மாநகராட்சி, ஒன்பது கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது. சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையத்தின் முன் பகுதி சாலை வழியாக பிரதமர் வருவார் என கூறப்பட்டது. எனவே 'ஒயிட் டாப்பிங்' செய்ய வேண்டிய சாலையில் அவசரமாக […]

பெங்களூரு மாநகராட்சி பிரதமர் மோடி வருகையால் சாலையை அழகாக்க ரூ.9 கோடி செலவிட்டுள்ளது.

கெம்பேகவுடா சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி நேற்று முன் தினம் பெங்களூரு வந்திருந்தார். அவர் பயணிக்கும் சாலைகளில் பள்ளங்களை மூடி தார் போடப்பட்டு அழகாக்கப்பட்டன. இதற்காக மாநகராட்சி, ஒன்பது கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது.

சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையத்தின் முன் பகுதி சாலை வழியாக பிரதமர் வருவார் என கூறப்பட்டது. எனவே 'ஒயிட் டாப்பிங்' செய்ய வேண்டிய சாலையில் அவசரமாக தார் பூசுவதற்காக சாலையை தோண்டினர். ஆனால் இறுதி வினாடியில், அவர் இந்த சாலை வழியாக செல்லவில்லை என தகவல் வந்த பின், தோண்டிய சாலையில் தார் போடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu