உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது கல்வி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 46 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, உலக அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களை கொண்ட 3 வது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவிலிருந்து, மும்பை ஐஐடி (118) , டெல்லி ஐஐடி (150) , ஐ ஐ எஸ் சி (211) , கரக்பூர் ஐஐடி (222) , சென்னை ஐஐடி (227) , கான்பூர் ஐஐடி (263) , டெல்லி பல்கலைக்கழகம் (328) , ரூர்கி ஐஐடி (335) , கௌஹாத்தி ஐஐடி (344) , அண்ணா பல்கலைக்கழகம் (383) , டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (580) ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த வருடத்தை விட இந்தியாவிலிருந்து இடம் பெற்ற மேற்குறிப்பிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.