ஆந்திர-தெலுங்கானா மாநிலத்தில் முதன்முறையாக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரெயில்களை இயக்க, 'பாரத் கவுரவ்' திட்டம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரெயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சுற்றுலா ரெயில் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களுக்கு ரெயில் பயணிகள் சென்றுவரலாம். குறைந்த செலவில் புனித இடங்களுக்கு பொதுமக்களை ரெயில்வே நிர்வாகம் அழைத்து செல்வதால் இந்த பாரத் கவுரவ் ரெயிலுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.