பாரத் பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் சமீர், தனது பதவியில் இருந்து விலகி, நிறுவனத்தின் ஆலோசகராக மட்டும் செயல்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர், வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவார் என கூறப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிதி அதிகாரி நளின் நேகி, நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், முன்னதாக, எஸ்பிஐ கார்ட்ஸ்-ல் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத் பே நிறுவனத்தின் இணை நிறுவனர் பவிக் கோளாடியா, மற்றும் நெகுல் மல்கோத்ரா, விஜய் அகர்வால், ராஜத் ஜெயின், கீதான்சு சிங்களா போன்ற உயர்மட்ட அதிகாரிகள், அண்மையில் நிறுவனத்திலிருந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து, சுஹைல் சமீரின் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.