பூடான் பிரதமர் ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கோ பூடான் பிரதமராக பதவி ஏற்றார். பதவியேற்ற பின் தனது முதல் வெளிநாட்டு பயணமாக நாளை இந்தியா வர உள்ளார். இதில் தலைநகர் டெல்லி வரும் டோப்கோ ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவிற்கு ஐந்து நாள் பயணமாக வரும் டோப்கோ தனது பயணத்தின் போது மும்பை செல்கிறார். இவருடன் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவும் மும்பை வந்தடைகிறது. இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நல்லுறவு கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.