அமெரிக்க அதிபர் ஜோ பைடன், லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான 14 மாதங்களாகத் தொடர்ந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் வரும் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றும் போது, “இது வரலாற்றுத் தருணமாகும். புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இதனால் லெபனான்-இஸ்ரேல் எல்லையில் போர் நிறுத்தப்படும். இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிரந்தரமாக முடிவுக்கு வரும்” என அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் தேவையான உதவிகளை வழங்க உள்ளன என்று அவர் கூறினார்.














