யூட்யூப் வீடியோக்களில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் புதிய அம்சம் அறிமுகம்

November 14, 2023

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், யூட்யூப் தளத்தில் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, யூட்யூப் வீடியோக்களை பார்க்கும் பொழுது, அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்கள் பி என் ஜி வடிவில் சேமிப்பாகும். மைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் கூகுள் குரோம் ஆகிய 2 தேடுபொறிகளை பயன்படுத்தும் பயனர்களும் இந்த புதிய அம்சத்தைப் பெறலாம். காப்பி வீடியோ பிரேம் (Copy Video Frame) என்ற புதிய அம்சத்தை யூட்யூப் வெளியிட உள்ளது. அதன்படி, வீடியோவில் உள்ள […]

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், யூட்யூப் தளத்தில் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, யூட்யூப் வீடியோக்களை பார்க்கும் பொழுது, அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்கள் பி என் ஜி வடிவில் சேமிப்பாகும். மைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் கூகுள் குரோம் ஆகிய 2 தேடுபொறிகளை பயன்படுத்தும் பயனர்களும் இந்த புதிய அம்சத்தைப் பெறலாம்.

காப்பி வீடியோ பிரேம் (Copy Video Frame) என்ற புதிய அம்சத்தை யூட்யூப் வெளியிட உள்ளது. அதன்படி, வீடியோவில் உள்ள குறிப்பிட்ட வினாடியை புகைப்படமாக சேமிக்க முடியும். பொதுவாக, வீடியோக்கள் ஓடும் பொழுது, ஸ்கிரீன் ஷாட் எடுத்தால், புகைப்படத்தின் தரத்தில் குறைபாடுகள் இருக்கும். ஆனால், யூடியூபில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காப்பி வீடியோ பிரேம் மூலம் புகைப்படம் எடுக்கும் பட்சத்தில், வீடியோவில் உள்ள அதே தரத்தில் புகைப்படங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu