கனடாவில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கையில் 62% வீழ்ச்சி

February 29, 2024

இந்தியா மற்றும் கனடா உறவில் கடந்த ஆண்டில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு தூதரக உறவில் பாதிப்பை ஏற்படுத்திய அளவுக்கு விரிசல் பெரிதாக இருந்தது. இதன் காரணமாக, கனடாவுக்கு குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, கனடாவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கையில் 62% க்கு மேலாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, கனடாவில் குடியேற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை 16796 ஆக இருந்தது. இது 2023 […]

இந்தியா மற்றும் கனடா உறவில் கடந்த ஆண்டில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு தூதரக உறவில் பாதிப்பை ஏற்படுத்திய அளவுக்கு விரிசல் பெரிதாக இருந்தது. இதன் காரணமாக, கனடாவுக்கு குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, கனடாவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கையில் 62% க்கு மேலாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, கனடாவில் குடியேற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை 16796 ஆக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் 6329 ஆக குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu